கொறோனாத் தொற்றால் 120.6 மில்லியன் டெலரை இழந்தது இத்தாலி!

சுற்றுலாத்துறையில் 337,000 பேர் வேலை இழப்பு

காணொளி இணைப்பு

இத்தாலியின் பொருளாதார நிலையை பார்க்கையில் வைரஸ் தொற்றின் நிமித்தம் இத்தாலியில் மொத்தம் 120.6 மில்லியன் டாலர் நிதி இழப்பை தாண்டியுள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்களிப்பு

51 சதவிகிதம் குறைந்துள்ளது.

அனைத்து நாடுகளின் சர்வதேச பயணங்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டதை அடுத்து சுற்றுலாத்துறையில் பணிபுரியும் 337,000 பேர் வேலையில்லாமல் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

SCHENGEN VISAINFO. COM REPORTS படி 2019ல் இத்தாலியின் உள்நாட்டு உற்பத்தியில் பயண சுற்றுலா பங்களிப்பு 236 மில்லியன் டாலர் அல்லது 13.1 சதவிகிதம் என்று தரவு காட்டுகின்றது. 2020 ல் 116 மில்லியன் டாலராக 7 சதவிகிதம் குறைந்தது.


2019ல் பயண மற்றும் சுற்றுலாத் துறையில் ஈடுபட்ட பெண்கள், இளைஞர்கள், மற்றும் சிறுபான்மையினரின் எண்ணிக்கை.

3.5 மில்லியனாக இருந்தது. 12 மாதங்களுக்கு பிறகு இது 9.6 சதவிகிதம் குறைந்து 2020 ல்

3.2 மில்லியனாக குறிக்கப்பட்டது.


உள்நாட்டு பார்வையாளர்களின் செலவீனம் 49.6 சதவிகிதமாகவும் சர்வதேச செலவீனங்கள் 62 சதவிகிதம் சரிவை காட்டுகின்றது.

இது சராசரியாக 70 சதவிகிதம் குறைவதை விட இன்னும் குறைவாக உள்ளது.


இவர்களுடைய கணிப்பின் படி 2021 ஜூன்மாதத்துக்குள் சர்வதேச பயணங்களை மீண்டும் தொடங்கினால் 48.5 சதவீதம் அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.


பயணங்களை எளிதாக்கும் பொருட்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ள DGC

DIGITAL GREEN CERTIFICATES முறை மூலம் தடுப்பூசி எடுத்த அனைத்து நபர்களுக்கும் CERTIFICATE ஐ வழங்க தொடங்குமாறும் அதன்மூலம் வெளிநாட்டு பயணங்களை ஆரம்பிக்க முடியும் எனவும் அரசாங்கத்தை வலியுறுத்தியது.

38 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: