எகிப்து தொடருந்து விபத்தில் பலர் பலி


எகிப்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதில், 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.


தலைநகர் கெய்ரோவுக்கு வடக்கே உள்ள பன்ஹா நகரத்தில் நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில், 4 தொடருந்து பெட்டிகள் தண்டவாளத்தைவிட்டு தடம்புரண்டுள்ளதாக, அந்நாட்டு தொடருந்து திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, சம்பவ இடத்துக்கு குறைந்தது 50 நோயாளர் காவு வாகனங்கள் அனுப்பப்பட்டதுடன், காயமடைந்தவர்கள், அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக எகிப்தின் சுகாதார அமைச்சு தெரிவித்தது.அத்துடன், விபத்தினால் தொடருந்துக்கு உள்ளே சிக்கியுள்ளவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன. விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக எகிப்தின் ரெயில்வேத் துறை தெரிவித்துள்ளது.

7 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: