பேஸ்புக்கின் புதிய முயற்சி.


பேஸ்புக்கின் புதிய முயற்சியாக இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் மெசஞ்சரை ஒன்றாக இணைத்துள்ள பேஸ்புக், தற்போது வட்ஸ்அப்பை இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதன்மூலம் மூன்று செயலிகளிலும் பயனாளர்கள் தங்கள் கணக்குகளை எளிதாக நிர்வகிக்க முடிவதுடன் மற்ற பயனாளர்களுடன் உரையாடலையும் எளிதில் மேற்கொள்ள முடியும் என கூறப்படுகிறது.

இத் தகவலை பேஸ்புக் நிறுவனத்தின் புதிய அம்சங்களை வௌியிடும் வலைத்தளமான WABetaInfo பகிர்ந்துள்ளது. மேலும் குறித்த அம்சமானது தற்போது உருவாக்கப்பட்டு வருவதாகவும், இது iOS பதிப்புகளுடன் மட்டுமே பொருந்தக்கூடியது என்றும், அதன் செயற்பாட்டைப் பொறுத்து Android பதிப்புகளுக்கான அடுத்த புதுப்பிப்பை பேஸ்புக் செய்யும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வாண்டின் இறுதிக்குள் இன்ஸ்டாகிராம் மற்றும் வட்ஸ்அப்பில் பயன்பாடுகளை ஒருங்கிணைக்க முயற்சிப்பதாக பேஸ்புக் மெசஞ்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

5 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: