முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறியுள்ளதாவது.
இன்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், எனக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. எங்கள் குடும்பத்தில் மற்ற யாருக்கும் கொரோனா தொற்று இல்லை.

இப்போது மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்றி நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். சுகாதார பணியாளர்களுக்கும், நாடு முழுவதும் எனக்கு ஆதரவாக இருக்கும் அனைவருக்கும் நன்றி” என்று அவர் கூறியுள்ளார்.
5 views