10 கி. மீற்றர் பயணக்கட்டுப்பாடுமே மூன்றாம் திகதி நீக்கப்படும்!

பிரான்ஸ் அரச வட்டாரங்கள் தகவல்

தற்சமயம் வதிவிடத்தில் இருந்து பத்துக் கிலோ மீற்றர்கள் என்று வரையறை செய்யப்பட்டிருக்கின்ற நடமாட்டக் கட்டுப் பாடுகள் அடுத்த மாதம் மூன்றாம் திகதி நீக்கப்படும்.


இன்று அதிபர் மக்ரோன் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புச் சபைக் கூட்டத்திற்குப் பின்னர் அரச வட்டாரங்கள் இத்தகவலை வெளியிட்டன என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதிபர் மக்ரோன் கடைசியாக தொலைக்காட்சி உரையில் தெரிவித்தபடி மே மாதம் 2ஆம் திகதிக்குப் பின்னர் நாடெங்கும் பயணக் கட்டுப்பாடுகள் எதுவும் இருக் காது என்று குறிப்பிடப்படுகிறது.எனினும் இரவு ஊரடங்கு குறித்து முடிவுஎதுவும் வெளியிடப் படவில்லை.


பாடசாலைகளை ஆரம்பிக்கின்ற திகதிகளிலும் மாற்றம் இல்லை. பாலர் மற்றும் ஆரம்பப் பாடசாலைகள் அறிவிக்கப்பட்டவாறு ஏப்ரல் 26 ஆம் திகதியும், கல்லூரிகள், உயர் கல்லூரிகள் அதனைத் தொடர் ந்து மே மூன்றாம் திகதியும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


பாடசாலைகளில் மேலும் பல சுகாதார விதி முறைகளைப் பின்பற்றவும் காற் றோட்ட வசதிகளை விரிவுபடுத்தவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள சுகாதார விதிகளைப் பிரதமர் நாளைய வியாழக்கிழமை மாலை செய்தியாளர் மாநாட்டில் அறிவிக்கவுள்ளார். உணவகங்களின் வெளி இருக்கைகளைத் திறப்பது போன்ற ஏற்பாடுகளை நாடளாவிய ரீதியில் அன்றி பிராந்தியங்கள் வாரியாக (déconfinement "territorial") முன்னெடுக்கின்ற யோசனையும் இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்டவுள்ள சுகாதார விதிகளைப் பிரதமர் நாளைய வியாழக்கிழமை மாலை செய்தியாளர் மாநாட்டில் அறிவிக்கவுள்ளார்.

92 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: