திருமறைக்கலாமன்ற இயக்குனர் அருட்தந்தை மரியசேவியர் அடிகளாரின் புகழுடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது

Updated: Apr 9

படங்கள் இணைப்பு

அமரத்துவம் அடைந்த திருமறைக்கலாமன்ற இயக்குனர் அருட்தந்தை நீ மரியசேவியர் அடிகளாரின் புகழுடல் இன்று யாழ்ப்பாணம் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


காலை 8.00 மணிக்கு யாழ் மரியன்னை பேராலயத்தில்ஆரம்பிக்கப்பட்ட அஞ்சலி நிகழ்வுகளில் இன மத மொழி வேறுபாடுகளைக் கடந்து பலர் கலந்து கொண்டனர். ஓய்வுபெற்ற தமிழ்துறைத்தலைவர் சிவலிங்கராஜா, யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர், பி2பி அமைப்பின் சார்பில் வேலன் சுவாமிகள், அமலமரித்தியாகிகள் சபையைச் சேர்ந்த அருட்திரு போல்நட்சத்திரம் அடிகளார், கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சரச்சந்திர ஜீவ, யாழ் தமிழ்ச்சங்கத் தலைவர் லலீசன், யாழ்.பல்கலைக்கழத்தின் இசைத்துறை விரிவுரையாளர் சுகன்யா அரவிந்தன், யாழ் பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரீகத்துறைத் தலைவர் அருட்தந்தை.போல் றொகான் மற்றும் தென்னிலங்கை பகுதியின் திருமறைக்கலாமன்ற இணைப்பாளர் சேபாலி ரணசிங்க, என பலரும் தந்தையாரின் கலைசார்ந்து, தமிழ் மொழிசார்ந்து, இன ஒருமைப்பாடு சார்ந்து ஆற்றிய பணிகள்பற்றி எடுத்துரைத்தார்கள்.

கத்தோலிக்க மதத்தலைவர்கள் பலரும் அருட்தந்தையின் ஆளுமைபற்றி விதந்துரைத்தனர். யாழ் மறைமாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் நன்றித் திருப்பலி ஒப்புக்கொடுத்தலோடு அவருடைய புகழுடல் சேமக்காலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. திருமறைக்கலாமன்ற பிரதி இயக்குனர் யோண்சன் ராஜ்குமாருடன் இணைந்து அனைத்து மன்ற அங்கத்தினரும் நிகழ்வுகளை ஒழுங்கு செய்திருந்தனர். இயக்குனரின் இழப்பினால் மன்ற உறுப்பினர்களோடு பல மக்கள் கண்ணீர் விட்டு அழுததை காணக்கூடியதாக இருந்தது. அடிகளாரின் இழப்பு தமிழுக்கும் கலைக்கும் பெரும் இழப்பாகும்.


418 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: