மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கான அனுமதி இல்லை :

கல்வி அமைச்சர் அறிவிப்பு.

மேல் மாகாணத்தில் இதுவரையில் கல்வி நடவடிக்கைள் ஆரம்பிக்கப்படாதிருந்த 5,11,13 தர வகுப்புக்கள் தவிர்ந்த ஏனைய வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவிருப்பதாக அமைச்சர் பேராசிரியர் ஜில்.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அவர் அறிவித்துள்ளார். நாடு முழுவதிலும் அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் வழமைபோன்று நடைபெறும் என்று குறிப்பிட்ட அமைச்சரிடம் மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு அனுமதியுண்டா? என்று ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு இதுவரையில் அனுமதி வழங்கப்படவில்லை என அமைச்சர் பதிலளித்தார். தனியார் பாடசாலைகள் சர்வதேச பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

0 views
TGTEnew-2.jpg
NYC Skyline BW

Breaking News:

Meiveli media's vision is to
Engage, Enlighten and Encourage Tamil Community towards open dialogue.
we produce shows on the basis of  Tamil community's culture, perception, economic condition, social networks, political and power structures, norms, values, demographic trends, history past experiences.

Subscribe to Our Newsletter

  • White Facebook Icon

© Meiveli