ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் அறிக்கை வெறுக்கத்தக்கது!
- ஜீ.எல். பீரிஸ் அதிருப்தி -

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை, அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டதென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இப்பிரேரணைகள் ஊடாகச் சாதாரண மக்களுக்கு நன்மைகள் எவையும் கிடைக்காது என்றும் மாறாக புலம்பெயர் அமைப்புகள் மாத்திரம் குறுகிய பயனைப் பெறலாம என தெரிவித்துள்ளார். அனைத்து நாடுகளுடனும் பொதுத் தன்மையைப் பேணுவது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கொள்கையாகும் எனத் தெரிவித்த அவர், இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களை அடிப்படையாகக் கொண்டு கொள்கை வகுக்கிறது என குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை விவகாரத்தில் மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகள் ஒருதலைப்பட்சமானது என்றுமு; சர்வதேசத்துக்கு அடிபணிந்து, இராணுவத்தினரை ஒருபோதும் காட்டிக் கொடுக்காது, இராணுவத்தினரைப் பாதுகாக்க மேலதிகமாக சட்டம் இயற்றுவோம்' எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரத்தில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர், ஒரு தலைப்பட்சமாகச் செயற்பட்டு, இலங்கையின் உள்ளக விவகாரங்கள் தொடர்பில், வெறுக்கத்தக்க வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார்' என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.