இலங்கையால் இன்னுமொரு முடக்கல் நிலையை தாங்க முடியாது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச.

இலங்கையால் இன்னுமொரு முடக்கல் நிலையை தாங்கமுடியாது இன்னுமொரு முடக்கல் நிலை மக்களின் வாழ்க்கை மீதும் பொருளாதாரத்தின் மீதும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முடக்கவேண்டும் என நாட்டின் சில தரப்பினர் கருதுகின்றனர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.அவ்வாறான நடவடிக்கையால் ஆரம்பத்தில் பயன் ஏற்படலாம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி எனினும் நீண்டகாலத்தில் இதனால் மக்களின் வாழ்க்கைக்கும் பொருளாதாரத்திற்கும் பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளால் பொருளாதார நடவடிக்கைகளை தடுக்கும் முடக்கல் ஊரடங்கு போன்றவற்றை நடைமுறைப்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் நாட்டின் வருமானத்தின் பெரும்பகுதி முறைசார வாழ்வாதாரத்தை அடிப்படையாக கொண்டது என தெரிவித்துள்ள ஜனாதிபதி அரசாங்கம் தனது பொறுப்புகளை நிறைவேற்றும் அதேவேளை மக்களும் தங்கள் கடமைகளை நிறைவேற்றவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.


59 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: