போர்க்குற்றவாளி சுமங்கல டயஸை கனேடிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.


முன்னாள் விமானப்படை தளபதியும், போர்க்குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்டவருமான சுமங்கல் டயஸ், தமது நாட்டிற்கான இலங்கை உயர் ஸ்தானிகாரக நியமிக்கப்பட்டதை கனடா நிராகரித்துள்ளதாக 'தமிழ் கார்டியன்' செய்தி வெளியிட்டுள்ளது.தமிழ் கனேடியர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்த முடிவுக்காக சுமங்கல டயஸை நிராகரிக்க அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து கனேடிய அரசாங்கம் அவரது நியமனத்துக்கு உடன்படவில்லை என தெரிவிக்கப்படகின்றது.

முன்னாள் விமானப்படை தளபதி டயஸ், ஆயுத மோதலின் இறுதி கட்டங்களில் சிரேஸ்ட விமான ஒருங்கிணைப்பாளாராக நியமிக்கப்பட்டார், போர்க் குற்றங்கள் என்று நம்பத்தகுந்ததாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கை இராணுவத்தின் 57,58 மற்றும் 59 பிரிவுகளின் தரை நடவடிக்கைகளுடன் இலங்கை விமானப்படை நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தார். 2005ம் ஆண்டில் இலங்கை விமானப் படையின் ஹிங்குரகோடா தளத்தில் அடிப்படை தளபதியாக டயஸ் நியமிக்கப்பட்டார். இதிலிருந்து பொதுமக்கள் இலக்குகளுக்கு எதிரான பல கண்மூடித்தனமான குற்றங்களை மேற்கொண்டார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கனடாவிற்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக அவரை நியமிக்க கடந்த ஆண்டு நவம்பரில் அறிவிப்பு வெளியானபோது, கனேடியர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வெளியானமையும் குறிப்பிடத்தக்கது.டயஸ் தற்சமயம் இத்தாலியில் துாதராகப் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

38 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: