ஒக்சிஜன் தயாரிப்பு முறைகளை கூகுளில் தேடுகின்ற இந்தியர்கள் வீடுகளில் முயற்சிப்பதால் ஆபத்து.


மருத்துவ ஒக்சிஜனை மக்கள் வீடுகளில் தயாரிக்க முயற்சிப்பது ஆபத்தானதுஎன்று இந்திய மருத்துவ நிபுணர்கள் எச்சரித்திருக்கின்றனர்.இந்தியாவில் மருத்துவ ஒட்சிசன் வாயுவுக்கு ஏற்பட்டிருக்கின்ற பெரும் தட்டுப்பாட்டினால் உயிர்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன.கறுப்புச் சந்தையிலும் வாங்க முடியாத பொருளாக ஒக்சிஜன் மாறியுள்ளது.

இதனால் தங்கள் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக பலரும் தாங்களாகவே ஒக்சிஜனைத் தயாரிக்கும் பரீட்சையில் இறங்கி உள்ளனர். இலகுவாக ஒக்சிஜன் தயாரிக்கும் முறை என்று விளக்குகின்ற வீடியோக்கள் சமூகவலைத் தளங்களில் வைரலாகப் பரவிவருகின்றன என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.


'கூகுள்' தேடு தளங்களில் "வீட்டில் ஒக்சி ஜன் தயாரிப்பது எப்படி" ("how to make oxygen at home") எனத் தேடுவோரின் எண்ணிக்கை சடுதியாக மிகவும் அதிகரித்திருக்கிறது என்று 'ரோய்ட்டர் இந்தியா' (Reuters) செய்திச் சேவை தெரிவித்திருக்கிறது. ஒக்சிஜன் தயாரிப்பு முறைகளை விளக்குகின்ற யூரியூப் வீடியோக்களும் (YouTube videos) புதிதாகப் பல மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளன என்று கூறப்படுகிறது.

"செறிவூட்டிகள்(concentrators) மூலமாக மருத்துவ ஒக்சிஜனைத் தயாரிப்பதற்கு என்று விஞ்ஞான பூர்வமான முறைகள் உள்ளன. மாறாக வேறு வழி முறைகளில் ஒக்சிஜன் வாயுவைத் தயாரிக்க வீடுகளில் முயற்சிப்பது உயிராபத்தான வெடிப்புகள் மற்றும் நச்சு வாயு ஆபத்துகளை ஏற்படுத்தி விடலாம் "இந்திய மருத்துவ சங்கத்தின் தென்னிந்திய செயலாளர் ஏ. ரவிக்குமார் ரோய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய தகவலில் இவ்வாறு எச்சரிக்கை செய்துள்ளார்


வீடுகளில் ஒக்சிஜன் வாயு தயாரிப்பது "பரீட்சிக்கப்படாத, நம்பமுடியாத வழி முறை" என்று சென்னை தொற்றுநோயியல் நிலையத்தைச் சேர்ந்த அறிவியலாளர் தருண் பட்நாஹர் (Tarun Bhatnagar)தெரிவித்திருக்கிறார்.இதேவேளை -நோயாளியின் உடலில் ஒக்சிஜன் அளவை சமநிலைக்கு உள்ளாக்கும் ஹோமியோபதி மருந்து என்ற பெயரில் சமூகவலைத்தளங்களில் தவறான முறையில் மருந்துகள் பற்றிப் பரப்பப்படும் தகவல்கள் குறித்து இந்திய அரசு மக்களை எச்சரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.


இந்தியாவில் கடைசியாக வெளியாகிய ஒரு நாள் தொற்று எண்ணிக்கை உலகில் இதுவரை எங்கும் பதிவாகி இருக்காத அளவாக நான்கு லட்சங்களைத் தாண்டி உள்ளது.

28 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: