வரலாற்று சிறப்பு மிக்க புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த விழா ஆரம்பம்!


கரைச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப் பொங்கல் திருவிழா இன்று விசேட வழிபாடுகளைத் தொடர்ந்து விளக்கு வைத்தல் வைபவத்துடன் ஆரம்பமாகியுள்ளது.


கொரோனா தொற்றினைக் கருத்திற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட அடியார்களே அனுமதிக்கப்படுவதுடன் நேர்த்திகளை நிறைவேற்றுபவர்கள் விரைவாக ஆலயத்தில் இருந்து வெளியேறி நேர்த்திக்கடன்களை செய்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தத் திருவிழாவில் இறுதியாக எதிர்வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு பங்குனி உத்தரப் பொங்கல் விழா நடைபெறவுள்ளது.

இன்று காலை ஏழு மணிக்கு (ஞாயிற்றுக்கிழமை) விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து விளக்கு வைக்கப்பட்டு பண்டைய மரபுகளுக்கு அமைவாக மீசாலை புத்தூர் சந்தியில் இருந்து பண்டம் எடுத்து வருவதற்காக மாட்டு வண்டிகளில் அடியார்கள் ஆலயத்தில் இருந்து புறப்பட்டுள்ளனர்.இந்நிலையில், இவர்கள் எதிர்வரும் 28ஆம் திகதி இரவு ஆலயத்தை வந்தடைந்தவுடன் பொங்கல் விழா நடைபெறும்.

அந்தவகையில், இன்று முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை காவடி, பாற்செம்பு மற்றும் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருவிழா காலத்தில் ஆலயச் சூழலில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கோ வெளிமாவட்டங்களில் இருந்து வருகின்ற பொதுப் பேருந்து சேவைகளுக்கோ எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை. கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து மட்டும் அடியவர்களின் நன்மை கருதி போக்குவரத்துச் சேவை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.


அத்துடன், ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் தங்களுடைய பாதுகாப்பினையும் ஏனையவர்களின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஆலய நிர்வாகம் கோரியுள்ளது.இதேவேளை, பொங்கல் உற்சவம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்று கூட்டத்திற்கு அமைவாக பொங்கல் விழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

125 views
TGTEnew-2.jpg
NYC Skyline BW

Breaking News:

Meiveli media's vision is to
Engage, Enlighten and Encourage Tamil Community towards open dialogue.
we produce shows on the basis of  Tamil community's culture, perception, economic condition, social networks, political and power structures, norms, values, demographic trends, history past experiences.

Subscribe to Our Newsletter

  • White Facebook Icon

© Meiveli