சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் குறித்து சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள பல முன்னணி தனியார் வைத்தியசாலைகளில் இந்தியர்கள் மேற்கொண்ட சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் குறித்து சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
சுற்றுலா விசாக்களில் இலங்கைக்கு வரும் இந்திய பிரஜைகளைப் பயன்படுத்தி இந்த மோசடி மேற்கொள்ளப்படுவதாக பொலிஸாரால் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தனியார் வைத்தியசாலைகளில் நீண்ட காலமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை சட்டவிரோதமாக செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.இதுபோன்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட இரண்டு பெண்கள் இறந்துள்ளனர், மேலும் இது குறித்து விசாரிக்க பொலிஸ் நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்றுள்ளது.