பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனான முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சந்திப்பு ரத்து!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைசென்றுள்ளார்.பாகிஸ்தான் பிரதமருக்கு விமான நிலையத்தில் இராணுவ மரியாதைகளுடன் பலத்த வரவேற்பு வழங்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவும் அமைச்சர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.
பாகிஸ்தான் பிரதமர் நாளைஜனாதிபதியை சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளதுடன், அதனையடுத்து வர்த்தகம் மற்றும் முதலீட்டு மாநாட்டில் உரையாற்றவுள்ளார். பாகிஸ்தான் பிரதமரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் கட்டாய தகனம் செய்யப்படுகின்றமையை எதிர்த்தும் நிபுணர் குழுவின் பரிந்துரைகளை உடன் அமுல்படுத்துமாறும் வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதேநேரம், இலங்கை வரும் பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனான சந்திப்பிற்கு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அனுமதி கோரியுள்ளநிலையில் ரவுப் ஹக்கீம் மற்றுமு; றிசாத் பதியுதீனுடனான பாகிஸ்தான் பிரதமாரின் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.