கண்ணீரில் பாரத தேசம் கனத்துப் போய்க் கிடக்கிறது ..

- தமனிகை பிரதாபன் -

உலகின் பெரும் சக்தியாகி

உலகிற்கே பல செய்தி சொல்லி

ஓர்மம் கொண்டிருந்த பாரத மாதா

இன்று பேரிடி விழுந்தவளாக

பேதலித்துப்போய் நிற்கின்றாள்..


ஓராண்டுக்கு மேலாக உலகமே

ஒடுங்கி ஒதுங்கி இருந்த வேளையிலும்

நிமிர்ந்து நின்றிட்ட மாபெரும் தேசமது

மரணத்தின் பிடியில் நொறுங்கிக்

போய்க் கிடக்கிறது....


காலத்தின் நீட்சியில்

எத்துணை அலாதியான

விஞ்ஞாத்தையும் மெய்ஞானத்தையும்

இரு கண்ணாக கொண்டு

பட்டொளி வீசி நின்றாள்

பாரத் தாயவள் ..


காலத்தின் பார்வையாலே

கண்பட்டு போனதுவோ?

உலகின் வல்லரசாகிவிடும்

என்ற கலாமின் கனவு தான்

காட்சிப் பிழையானதுவோ?

இன்று கண்ணீரின் பூமியாகி

அந்தகாரம் சூழ்ந்து போய்

இருண்டு கலங்கிக் கிடக்கிறது

அந்த பெருந்தேச தாயுள்ளம்.....


இயற்கையின் சீற்றங்களை

பக்குவமாய் வென்றிட்டதேசமது

கண்ணுக்கு தெரியாத கொரோனாவின்

பிடியினுள் சிக்கித்தான் செய்வதறியாது

சின்னாபின்னமாகி கிடக்கிறது..


இந்திய தேசமே

அழிவின் விளிம்பிலிருந்து பூமிப்பந்தை

காத்திட கை கொடுத்திடும் என்று

உலகமும் ஐநாவும் எதிர்வு கூறி நிற்க

பரந்திட்ட தேசமோ மீளாத சோகத்தில்

உருக்குலைந்து போகிறது...

உறவுகளின் கதறலதை

சகித்திருக்க முடியவில்லை..

நோயாளிக்கு மருந்தில்லை..

மருத்துவரும் அங்கில்லை...

கட்டிலுமில்லை ...

காத்திருக்க முடியவில்லை...

சுவாசிப்பதற்கு காற்றும் இல்லை...

மருத்துவ மனைகளில் ஓலங்களுக்கு

குறைவில்லை ..

தந்தை இல்லை தாயுமில்லை ...

உற்றவர் என்று யாருமில்லை ...

காட்டியவள் அருகிலில்லை..

கட்டியணைக்க யாருமில்லை..

பெற்றவர்க்கு கொள்ளி வைக்க

பிள்ளையுமங்கில்லை ...

இரவு பகல் என்றின்றி

இரைகிறது காவுவண்டி

மருத்துவமனைக்கும் சுடுகாட்டுக்குமாக..

காணும் இடமெல்லாம்

தீச்சுவாலை கனன்று எரிகிறது ...

யார் உடலம் எங்கென்று யாருக்கும்

தெரியவில்லை..

மார் தட்டிய தேசத்துக்கு

மரணம் தான் மாட்சிமையோ?

வென்றுவிட வேண்டுமிந்த

வேண்டாத கொரோனாவை ...


அன்று ஈழத்தில் நாம்

போரின் இறுதி நாட்களில்

குண்டு மழைக்குள்ளே சிதறித்

துடித்து நின்றிருந்தும் எமக்காக

யாரும் அழுகுரலை செவி சாய்க்க

வந்திடவில்லை-ஆனால் இன்று

அயல் தேச உயிருக்காய்

ஆழ்மனதில் இருந்து

பிரார்த்திக்கின்றோம்..

இழப்பின் வலியினை

நொடிக்குநொடி அனுபவித்தவர்களாய்..

பாரதத்தாய் தன் குழந்தைகளை

பத்திரப்படுத்திக் கொள்ள

எல்லாமுமான இறைவா

சக்தி கொடு....169 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: