10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றி.

ஐபிஎல்.

14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ஐதராபாத்- கொல்கத்தா அணிகள் மோதின.


இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது . கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 187 ஓட்டங்கள் குவித்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ராணா 56 பந்துகளில் 85 ஓட்டங்கள் அடித்தார். பந்து வீச்சை பொருத்தவரை ரஷித் கான், முகம்மது நபி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதையடுத்து 188 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி அணியின் சார்பில் விருதிமான் சகா மற்றும் கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இதில் வார்னர் 3 ஓட்டங்களிலும், சகா 7 ஓடங்களுடனும் வெளியேற, அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய மணிஷ் பாண்டே மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தனர். இந்த ஜோடியில் பேர்ஸ்டோவ் 55 ஓட்டங்கள் , அவரைத்தொடர்ந்து நபி 14 ஓட்டங்கள், விஜய் சங்கர் 11 ஓட்டங்கள்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் மணிஷ் பாண்டே 61 (44) ஓட்டங்கள்களும், அப்துல் சமது 19 (8) ஓட்டங்கள்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

முடிவில் ஐதராபாத் அணி 20 ஒவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 177 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணியின் சார்பில் அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஐதரபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றிபெற்றது.

20 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: