AstraZeneca தடுப்பூசி செலுத்திக்கொண்ட 32 வயதான இத்தாலியப் பெண்ணுக்கு மூளையில் இரத்தக்கசிவு!
San Martino Policlinico வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை

இத்தாலியின் இப்போதைய நிலவரங்கள் ஒரு இறுக்கமான சூழ்நிலைகளுக்குள்ளேயே காணப்படுகின்றது.
மக்கள் அதிகமாக வீடுகளுக்குள் முடக்கப்பட்டிருக்கின்ற நிலையில் சித்திரை மாதம் முழுவதும் சிவப்பு மற்றும் ஆரஞ்சு வலையபகுதிகளாகவே கண்காணிப்பு அமுலில் இருக்கும் நிலையில் வீதி தடுப்பு பரிசோதனைகளும் முடக்கிவிடப்பட்டுள்ளன.
இத்தாலியின் சுகாதார அமைச்சின் தரவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் 18,025 தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த காலங்களை விட தொற்றுக்கள் குறைந்துவருவதாகவும் 11,195 புதிய உள்ளீடுகளுடன் மொத்தம் 3,703 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே நிலையில் san Martino policlinico வைத்தியசாலையில் 32 வயதான பெண் ஒருவர் இரத்தக்கசிவு பெருமூளை நோய் தொடர்பாக தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த இரண்டாம் திகதி அனுமதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்ட பெண் மார்ச் 22 அன்று AstraZeneca தடுப்பூசி பெற்றுக்கொண்டவர் என்றும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் சிவப்பு வலயமாக்கப்பட்டு 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொலிஸ்படைகள் பணிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாத்திரம் 80 க்கு மேற்பட்ட மீறல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற விஷேட ஆராதனை ஒன்றில் போப் பிரான்சிஸ் உலகமெல்லாம் இந்த தொற்றுநோய் இன்னும் முழுவீச்சில் உள்ளதாகவும் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியால் ஏழைகள் மிகவும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் தடுப்பூசிகள் வினியோகத்தில் ஏற்படும் தாமதங்களை சமாளிக்க சர்வதேச சமூகத்தை வலியுறுத்தும் ஒரு வலுவான எச்சரிக்கை கண்டனத்தையும் தொடுத்துள்ளார்.
இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராட நாமனைவரும் அழைக்கப்பட்டிருக்கின்றோம். இந்த "தடுப்பூசிகளின் சர்வதேசவாதத்தின்" மனப்பான்மையில் அவற்றின் வினியோகத்தில் ஏற்படும் தாமதங்களை சமாளிப்பதற்கும், குறிப்பாக ஏழ்மையான நாடுகளுடன் பகிர்வை எளிதாக்குவதற்கும் பொறுப்புணர்வுடன் செயற்படும் படி முழு சர்வதேச சமூகத்தையும் கேட்டுக்கொண்டுள்ளார்.