யாழ் மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணனைச் சந்தித்தவர்கள், அவதானமாக இருக்கவும்.

கடந்த 20ஆம் திகதியன்று, யாழ்ப்பாணம் - நெல்லியடியில் நடைபெற்ற திருமண வைபவத்தில் கலந்துகொண்ட ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நிகழ்வில் தானும் கலந்துகொண்டிருந்ததாக யாழ்ப்பாணம் மாநகர மேயர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
எனவே, தன்னைத் தானே சுயதனிமைப்படுத்திக் கொண்டுள்ள அதேவேளை, பிசிஆர் பரிசோதனையும் செய்துள்ளதாக, மேயர் அறிவித்துள்ளார்.எனவே, தன்னோடு இந்தக் காலப் பகுதியில் தொடர்புகொண்டவர்கள் அவதானமாக இருக்குமாறு, அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன், இன்றையதினம் நடைபெறவிருந்த மாநகர சபையின் விசேட அமர்வும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
0 views