- smithjayanth6
ஜனாஸா விடயத்தில் அரசாங்கம் கடும் போக்காக நடந்துகொள்கிறது'

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்பில் அரசாங்கம் போக்குத்தனமாக நடந்துகொள்வதாக, ஐக்கிய மக்கள்சக்தியின் கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்று நீண்டகாலமாக வேண்டுகோள் விடுத்து வருவதாகவும் ஆனாலும் அரசாங்கம் அதற்குசெவிசாய்க்கவில்லை என்றும் நிபுணர்கள் குழு என்று கூறிக்கொண்டு காலத்தைக் கடத்திக்கொண்டுள்ளனர் என்றும் சாடினார். கொவிட் மரணங்கள் நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்றத்தில் தெரிவித்தபோதும் இன்று சிலர் பிரதமரையே கேலி செய்ய முற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முரணான கருத்துக்களால் அரசாங்கம் இன்று கேலி கூத்தாக மாறிவிட்டது என தெரிவித்ததோடு, அத்தியாவசியப் பொருட்களின்விலைகளைக் குறைத்து வரத்தமானிகள் வெளியிட்டாலும் அவை நடைமுறைக்கு வருவதில்லை. ஒருவர் வெளியிடும் வர்த்தமானியை இன்னொருவர் தடை செய்கின்றார். இவ்வாறு ஒரு கேலி கூத்தான அரசாங்கத்தையே தாங்கள் தற்போது காண்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.