யாராவது கண்ணனை கண்டால்நான் தேடியதாக சொல்லுங்கள்!யாராவது கண்ணனை கண்டால் நான் தேடியதாக சொல்லுங்கள்!

இது அடைக்கப்பட்டுக் கிடக்கின்ற ஒரு கனவுப் பாதை என்பதை நிராகரிக்காமல் நிரூபணம் செய்வதற்கு கைச்சாத்திட்டவன் எங்களில் யார்? வழி நெடுகிலும் நாங்கள் காறி உமிழ்ந்த எச்சில்களின் நாற்றங்களை சுற்றி ஈக்கள் மொய்த்துக் கொள்கின்றன என்பதை சத்தமில்லாமல் கூட எங்கள் காதுகளில் இதுவரை யாரும் சொல்லத் துணியவில்லை. உங்களுக்கு தெரியுமா? கடவுள்களின் மாநாடுகளில் சாத்தான்கள் கூட மலம் கழிப்பதில்லை. சரித்திரங்களை சங்காரம் செய்ய நரிக்குறவர்களுக்குக் கூட சம்மதம் இருந்ததில்லை. இங்கு எரிந்துகொண்டிருப்பது காற்றை விட வேகமான ஒரு காட்டுத் தீ. ஒரு காக்காக் கூட்டத்தின் கரைதல்களுள் கட்டுண்டு போவதல்ல யுகங்களின் முள்ளந்தண்டு என்பதை கடிகாரங்கள் சொல்லிக்கொண்டுதான் ஓடுகின்றன. செய்யப்படாத சொல்லுக்கும் சொல்லப்படாத செயலுக்கும் ஒரே பாதையில் பயணங்கள் எழுதப்படச் சாத்தியம் இல்லை என்பதையே இப்போது முன்னால் பறந்துபோன குருவியொன்றும் சொல்லிச் சொல்லிப் போகின்றது. யாராவது கண்ணனை கண்டால் நான் தேடியதாக சொல்லுங்கள். ஓடிக்கொண்டிருக்கின்ற தேர் ஒன்றில் தான் சாரதியாய் இருக்கிறேன் என்பதை புரிந்துகொண்டால் என்னிடம் வரட்டும். அவனிடம் சொல்வதற்கு இப்படித் தொடங்கும் ஒரு பகவத் கீதை இப்போது என்னிடம் இருக்கிறது. “கல்லும் முள்ளும் தாண்டியெழுந்து......”


- சாம் பிரதீபன் -80 views0 comments
  • White Instagram Icon

Contact Us

Address

© Copyright  by Meiveli Drama School.

Tel: +44 7779039372

Email: meivelidrama@gmail.com

Yeading Lane, Hayes, UB4 9LE