கடந்த 72 மணிநேரத்தில் 12 பயங்கரவாதிகள் சுட்டு கொலை.


ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒழிக்கும் பணியில் கடந்த சில நாட்களாக பாதுகாப்பு படையினருடன் இணைந்து காஷ்மீர் போலீசாரும் ஈடுபட்டு உள்ளனர். இதில் கடந்த 72 மணிநேரத்தில் மொத்தம் 12 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.

இதுபற்றி ஜம்மு மற்றும் காஷ்மீர் டி.ஜி.பி. தில்பாக் சிங் இன்று கூறும்பொழுது, பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் மண்டல போலீசார் இணைந்து நடத்திய பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் கடந்த 3 நாட்களாக பல்வேறு பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.

இவற்றில் திரால் மற்றும் சோபியான் மாவட்டத்தில் நடந்த என்கவுண்ட்டரில் மொத்தம் 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஹரிபோரா பகுதியில் அல் பத்ரி அமைப்பின் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

இதுதவிர சமீபத்தில் பீஜ்பெஹாரா பகுதியில் நடந்து முடிந்த என்கவுண்ட்டரில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பினை சேர்ந்த 2 பேர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். இதுவரை கடந்த 72 மணிநேரத்தில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என கூறியுள்ளார்.

2 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: