கொடிகாமத்தில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கம்- புகையிரதமும் கொடிகாமத்தில் நிறுத்தப்படாது.


தென்மராட்சி, கொடிகாமம் பிரதேசத்தில் அதிக கொரோனா தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ள நிலையில் கொடிகாமம் பொதுச் சந்தை மற்றும் கடைத்தொகுதி முடக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்


தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உள்பட்ட கொடிகாமத்தில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மறு அறிவித்தல்வரை முடக்கப்பட்டுள்ளது கொடிகாமம் வடக்கு மற்றும் கொடிகாமம் மத்தி ஆகிய இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளுமே நேற்று இரவு முதல் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளது.


இதேவேளை எந்தவொரு புகையிரதமும் கொடிகாமம் புகையிரத நிலையத்தில் நிறுத்தப்படாது. பயணிகள் சாவகச்சேரி புகையிரதநிலையத்தை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து (மு.ப 11.50) கடுகதி புகையிரதத்தில் பயணம் செய்யும் பயணிகள் பளை அல்லது யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் இறங்கலாம் என தெரிவிக்கப்படுள்ளது.




6 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: