ஏப்ரல் மாத நட்சத்திரமாகிறார் செல்வன் குபேரன் சுரேஷ்குமார்.


மெய்வெளி நாடகப் பயிலகத்தின் மாதாந்த பயிற்சியாளர் அளிக்கையில் 2019 இன் ஏப்ரல் மாதத்திற்கான STAR OF THE MONTH பாராட்டு விருதினை செல்வன் குபேரன் சுரேஷ்குமார் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

மெய்வெளி நாடகப் பயிலகத்தின் மாதாந்த பயிற்சியாளர் அளிக்கை கடந்த ஏப்ரல் மாத இறுதி வாரம் வெள்ளிக்கிழமை(26 April 2019) Hayes இல் உள்ள Barnhill community high school இல் நடைபெற்றது. பெற்றோர்களும் பிள்ளகளை உற்சாகமூட்ட வந்திருந்த விருந்தினர்களும் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் IBC தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் திரு.முகுந்தன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தார். தாம் கற்றுக்கொண்ட அரங்க நுட்பங்களையும் தமது உருவாக்கத்தில் தயார்ப்படுத்தபட்ட குறு நாடக அளிக்கைகளையும் பயிற்சியாளர்கள் இந்த நிகழ்வில் நிகழ்த்திக் காட்டியிருந்தார்கள். 

உடல்மொழி, குரல்மொழி, காண்பிய வெளிப்பாடு போன்ற பல சுவாரஸ்யமான அளிக்கைகளோடு அன்றைய நாளை பயிற்சியாளர்கள் சிறப்பித்திருந்தார்கள்.

முப்பது பயிற்சியாளர்கள் பயிலும் இந்த நாடகப் பயிலகத்தில் ஏப்ரல் மாதத்திற்கான பயிற்சியாளர் நட்சத்திரமாக செல்வன் குபேரன் சுரேஷ்குமார் தெரிவுசெய்யப்பட்டு பாராட்டு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.


பயிற்சிகளின் போது பயிற்சியாளர்களின் ஈடுபாடு, செயற்திறன், ஆர்வம், தற்துணிவு, பேசும் திறன், பாடும் திறன், ஆடும் திறன், தலைமத்துவம், கூட்டுச் செயலுணர்வு, நன் நடத்தை, பயிற்சிகளுக்கான கிரமமான வரவு போன்ற பல விடயங்கள் மதிப்பீட்டுக்கு உட்படுத்தி இந்த நட்சத்திர தெரிவு மாதாந்தம் இடம்பெறும் என்று மெய்வெளி நிர்வாகம் நிகழ்வில் தெரியப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

STAR OF THE MONTH விருது பெறும் செல்வன் குபேரன் சுரேஷ்குமாரை மெய்வெளி நிர்வாகம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து நிற்கின்றது.

89 views0 comments
  • White Instagram Icon

Contact Us

Address

© Copyright  by Meiveli Drama School.

Tel: +44 7779039372

Email: meivelidrama@gmail.com

Yeading Lane, Hayes, UB4 9LE