• smithjayanth6

சரணடைந்த விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


யுத்தத்தின் இறுதியில் சரணடைந்த விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என ஜனாதிபதி தெரிவித்தார் என அமெரிக்காவின் யுத்த குற்றவிவகாரங்களுக்கான முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ரப் தெரிவித்துள்ளதை ஜனாதிபதி அலுவலகம் நிராகரித்துள்ளது.அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் தெரிவித்துள்ளமை குறித்து ஜனாதிபதியின் விளக்கத்தினை பெறமுயன்றவேளை ரப் தெரிவித்துள்ளமைக்கு எந்த ஆதாரமும் இல்லை என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்தது என ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.


யுத்தகுற்ற விவகாரங்களிற்கான அலுவலகத்திலிருந்து ஓய்வுபெற்று ஏழு வருடங்களின் பின்னர் ஸ்டீபன் ரப் அவ்வாறான குற்றச்சாட்டை முன்வைப்பதற்கான நோக்கம் என்னவெனவும் ஜனாதிபதி அலுவலகம் கேள்வி எழுப்பியுள்ளது. ரப் 2012, 2015 இல் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார் என்பதை சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி அலுவலகம் ஜெனீவா அமர்வினை அடிப்படையாக கொண்டே இந்த அதிர்ச்சிதரும் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளது. இலங்கைக்கு களங்கம் ஏற்படுத்தும் ஒட்டுமொத்த முயற்சியின் ஒரு பகுதியே இது என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது என ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

3 views
TGTEnew-2.jpg
NYC Skyline BW

Breaking News:

Meiveli media's vision is to
Engage, Enlighten and Encourage Tamil Community towards open dialogue.
we produce shows on the basis of  Tamil community's culture, perception, economic condition, social networks, political and power structures, norms, values, demographic trends, history past experiences.

Subscribe to Our Newsletter

  • White Facebook Icon

© Meiveli