தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரின் பிறந்தநாளை கேக் வெட்டிகொண்டாடியவர்கள் கைது!


தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி, முகநூல் ஊடாக பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்தவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு முகநூல் ஊடாகபிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரியவருகின்றது. அந்தவகையில் நேற்று மாலை, ஏறாவூரில் 23பேரும் களுவாஞ்சிக்குடியில் 3பேரும் குறித்த செயற்பாடுகளுக்காக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபர் அணியை சேர்ந்த முக்கிய உறுப்பினரும் இதில் உள்ளடங்குகின்றார்.

மேலும், ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் குறித்த நபர்கள் தடுத்துவைக்கப்பட்டு,விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை குறித்த சம்பவம் அறிந்து ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இது தொடர்பில் பொலிஸாருடன் கலந்துரையாடியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


327 views0 comments
  • White Instagram Icon

Contact Us

Address

© Copyright  by Meiveli Drama School.

Tel: +44 7779039372

Email: meivelidrama@gmail.com

Yeading Lane, Hayes, UB4 9LE