ஜெர்மனியில் 5 நாட்கள் முழு லாக்டவுனை அறிவித்துள்ளார்- அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல்.

பிரிட்டன் திரிபுபட்ட கொரோனா வைரஸ் காரணமாக அதிகரித்துள்ள பாதிப்பை புதிய பெருந்தொற்று என்று குறிப்பிட்டுள்ள ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல், ஈஸ்டர் பண்டியை வருவதால் வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த 5 நாட்கள் முழு லாக்டவுனை அறிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் தினசரி வைரஸ் பாதிப்பு இரட்டிப்பு வேகத்தில் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல், மாநில அரசுகளுடனான ஆலோசனையைத் தொடர்ந்து ,கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் ஐந்து நாட்கள் ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இதனால் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை ஜெர்மனியில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத வழிபாடுகள் அனைத்தும் ஆன்லைன் வழியே மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மளிகைக் கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.