லண்டனில் தனது பிள்ளைகளை கொலை செய்த இலங்கையர்: குற்றத்தை ஒப்புக்கொண்ட தந்தை
Updated: Nov 9, 2020

லண்டனில் தனது குழந்தைகள் இருவரையும் கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டை சந்தேக நபரான நடராஜா நித்தியாகுமார் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
நடராஜா நித்தியகுமார் ஏப்ரல் 26 அன்று கிழக்கு லண்டனின் இல்ஃபோர்டில் தனது குழந்தைகளான 19 மாத பவின்யா மற்றும் மூன்று வயதுடைய நிஜிஷ் ஆகியோரை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
இதன் போது குளியலறையிலிருந்த குழந்தைகளின் தாய் பொலிஸாருக்கு தவல்வழங்கி, வடக்கு அல்ட்பரோ வீதியில் உள்ள வீட்டிற்கு அவசர சேவைககள் வரவழைத்துள்ளார்.இதன் போது பவின்யா சம்பவ இடத்தியே உயிரிழந்ததாகவும், நிஜிஷ் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும்
தெரிவிக்கப்லேபடுகிறது. இதன் போது தன்னையும் கத்தியால் வெட்டிக்கொண்ட நித்தியகுமார் சிகிச்சைகளுக்கு பின்னர் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டபோது, தனது குழந்தைகளை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அவர் தனது மகனையும், மகளையும் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார், அவர் மனச்சோர்வடைந்ததாகவும், அவர் ஒரு கடையில் வேலை செய்யும் போது வாடிக்கையாளர்கள் அவரை வருத்தப்படுத்தியதாகவும் கூறியுள்ளார். சட்டத்தரணி டங்கன் அட்கின்சன் கியூசி ஓல்ட் பெய்லி மனநல மருத்துவர்களிடம், பிரதிவாதி ,ஒருவித மன நல கோளாறால் அவதிப்படுவதாக நம்புவதாகவும், அதுவேஅவர் தனது குழந்தைகளை கொல்ல வழிவகுத்துள்ளது என்றும் கூறியுள்ளார். பிரதிவாதிக்கு முந்தையகால வன்முறை வரலாறு இல்லாத காரணத்தாலும் அவருக்குமருத்துவ ஆலோசனை தேவை என்ற காரணத்தாலும் டிசம்பர் 10 வரை அவரது தீர்ப்பு
ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கிழக்கு லண்டனில் உள்ள பாதுகாப்பான மனநல மையத்திற்கு சிகிச்சைகளுக்காக நித்தியகுமார் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கதாகும்.