10 அரசியல் தலைவர்களின் குடியுரிமையைப் பறிக்க அரசாங்கம் சதி!

ஜனாதிபதி ஆணைக்குழுவில் எதிர்க்கட்சி சந்தேகம்!

எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த 10 அரசியல் தலைவர்களின் குடியுரிமையைப் பறிப்பதற்கு அரசாங்கம் சதி செய்வதாகத் தெரிவித்த எதிர்க்கட்சியின் பிரதமக் கொறடாவும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷமன் கிரியெல்ல, இதற்காகவே அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதேஇவ்வாறு தெரிவித்தார். மேலும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான விவாதம், நாளையும் 8ம் திகதியும் நாளை மறுதினமும் 9ம திகதியும் நடைபெறுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதனைக் காலந்தாழ்த்துவதற்கு இடமளிக்க முடியாதெனத் அவர் குறிப்பிட்டார்

2 views
TGTEnew-2.jpg
NYC Skyline BW

Breaking News:

Meiveli media's vision is to
Engage, Enlighten and Encourage Tamil Community towards open dialogue.
we produce shows on the basis of  Tamil community's culture, perception, economic condition, social networks, political and power structures, norms, values, demographic trends, history past experiences.

Subscribe to Our Newsletter

  • White Facebook Icon

© Meiveli