தமிழ் – முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறவைப் பிரிக்க அரசின் சதி: சுமந்திரன் எச்சரிக்கை.


கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம் சகோதரர்களின் ஜனாஸாக்களை கிளிநொச்சி மாவட்டம் இரணைதீவில் அடக்கம் செய்ய அரசு எடுத்துள்ள தீர்மானம் ஏற்றுக்கொள்ள முடியாதது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


இது தமிழ் – முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறவைப் பிரிக்க அரசால் மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டம் என்றும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம் சகோதரர்களின் ஜனாசாக்களை அவர்களின் சொந்த இடங்களிலேயே அடக்கம் செய்ய அரசு தயங்குவது ஏன்? எனவும் அவர் கேள்வி அனுப்பியுள்ளார். ஜனாசாக்களை வைத்து இன முறுகலை ஏற்படுத்தும் கேவலமான அரசியல் நடவடிக்கைகளை அரசு உடன் நிறுத்த வேண்டும் என்றும் முஸ்லிம் சகோதரர்களின் ஜனாசாக்களுக்கு மதிப்பளித்து அவற்றை அந்தந்தப் பிரதேசங்களிலுள்ள மைய வாடிகளில் அடக்கம் செய்ய அரசு முன்வர வேண்டும் என்பதே முஸ்லிம் சகோதரர்களின் விருப்பமும் அதுவே என அவர் தெரிவித்துள்ளார்.

0 views
TGTEnew-2.jpg
NYC Skyline BW

Breaking News:

Meiveli media's vision is to
Engage, Enlighten and Encourage Tamil Community towards open dialogue.
we produce shows on the basis of  Tamil community's culture, perception, economic condition, social networks, political and power structures, norms, values, demographic trends, history past experiences.

Subscribe to Our Newsletter

  • White Facebook Icon

© Meiveli