கொரோனாவை காட்டி மக்களின் நினைவேந்தல் உரிமையை அரசு பறிக்கக்கூடாது
நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் கோரிக்கை

கொரோனா தொற்றுநோய் காரணமாக நிலவும் அசாதாரண சூழல் குறித்த நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் கொரோனாவை காரணம் காட்டி மக்களின் நினைவேந்தல் உரிமயை பறிக்கக்கூடாது என கருத்து தெரித்துள்ளார்.
நவம்பர் மாதம் உலகெங்குமுள்ள மக்கள் போரில் மரணித்த தம் மாவீரர்களைக் நினைவேந்தும் காலம் என்றுமு; நாட்டில் மூன்று தசாப்த யுத்தமொன்று நிகழ்ந்தேறிய நலையில் வடக்கு கிழக்கில் இலங்கை அரசாங்கத்திற்கெதிராக ஆயுதம் ஏந்திப் போராடி மரணித்தவர்களின் தாய்மார்கள், தந்தையர்கள், சகோதர்கள் மற்றும் பிள்ளைகள் பலர் இருக்கிறார்கள் என்றும் நவம்பர் மாதத்தில் தான் அவர்கள் இவர்களைக் காலம் காலமாக நினைவேந்தி வருகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பியின் தலைவர் ரோகன விஜயவீரவைத் நினைவு கூருவதற்கு அனுமதியிருக்கிற அதேவேளை தமிழ் பெற்றோர்களுக்கோ இங்கு தம் இறந்த பிள்ளைகளை நினைவு கூரும் உரிமை மறுக்கப்படுகிறமை கவலைக்கிடமாக உள்ளதாக குறிப்பிட்டார். நினைவு கூரலிலும் கூட இந்த நாட்டில் பாகுபாடு காட்டப்படுகிறது என்றும் இந்த விடயத்தை தான் இந்த ஒத்திவைப்புப் பிரேரணை விவாதத்தில் சுட்டிக்காட்டுவதற்குக் காரணம் உண்டு எனவும் குறிப்பிட்டார்.
கொரோனாவைக் காரணம் காட்டி பொலீசாரும், ஏனைய அதிகாரிகளும் மக்கள் துயிலும் இலங்களுக்குச் செல்வதை இடைமறிக்கத் தயாராவதை தானன் அறிந்து கொண்டுள்ளநிலையில் அரசாங்கம் கொரோனாவைக் காரணம் காட்டி மக்களது நினைவேந்தல் உரிமையைப் பறிக்கக் கூடாதெனக் கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டார்.