இந்த வருடம் நாங்கள் மீள்வோமா? "தெரியாது " என்று மக்ரோன் பதில்,வைரஸ் திரிபுகளே தீர்மானிக்கும்.


கொரோனா வைரஸ் நெருக்கடி ஏற்படுத்திய சுகாதார நெருக்கடியில் இருந்து நாடு இந்த ஆண்டில் விடுபட்டு மீளும் என நினைக்கிறீர்களா? பிராந்தியப் பத்திரிகைகளுக்கான விசேட செவ்வியில் இப்படி ஒரு கேள்வி அரசுத் தலைவரிடம் எழுப்பப்பட்டது. அதற்கு "இல்லை, எனக்குத் தெரியாது" என்று பதிலளித்த மக்ரோன், "புதிய, கட்டுப்படுத்த முடியாத திரிபுகள் இல்லை என்றால் அது சாத்தியம்.எங்க ளுடைய அறிவியலாளர்களும் தயாரிப்பாளர்களும் புதிய வைரஸுகளுக்குப் பதிலளிக்கக் கூடிய தடுப்பூசிகளை 80 முதல் 100 நாட்களுக்குள் தயாரித்து விட முடியும் என்று கூறுகின்றனர். எனவே நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கி றேன். " எனத் தெரிவித்தார்.

வருடாந்தம் தடுப்பூசி அவசியமா? எனக் கேட்கப்பட்டது. அதற்கு " நாங்கள் இந்த வைரஸுடன் பல வருடங்கள் வாழவே ண்டி இருக்கலாம். எனவே வருடாந்தம் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள வேண்டி வரலாம் "-என்றும் அவர் எச்சரிக்கை செய்தார். ஆனால் ஆரம்பத்தில் இருந்தது போன்று மீண்டும் அது மோசமாக மேலெழுவதற்கு இனிமேல் வாய்ப்பில்லை என்பதை உங்களுக்கு நான் உறுதியாகச் சொல்வேன். நாங்கள் தடுப்பூசியைத் தீவிரப்படுத்தும் போது வைரஸ் புதிய வடிவங்களை எடுப்பதை வாராந்தம் காண்கிறோம். எனவே தீவிர விழிப்பு நிலை பேணப்படவேண்டியது அவசியம். -இவ்வாறு மக்ரோன் மேலும் தெரிவித்துள்ளார்.


பிரான்ஸில் இந்தியத் திரிபு வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுவருகின்ற நிலையில் அரசுத் தலைவரின் இந்தக் கருத்து வெளியாகி இருக்கிறது.

அவசர தடுப்பு நடவடிக்கை.

இதேவேளை - அறிவிக்கப்பட்டபடி நாட்டில் பொது முடக்கக் கட்டுப்பாடுகள் ஜூன் 30 ஆம் திகதியுடன் முற்றாக முடிவுக்கு வந்தாலும் அதன் பிறகு அல்லது அதற்கு முன்னர் திடீரென வைரஸ் பரவல் அதிகரித்தால் எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும்?

இதற்காக "அவசரத் தடுப்பு" ("freins d'urgence") என்ற நடவடிக்கையை அரசு அறிவித்துள்ளது. அதன்படி தொற்று நிலைமை எங்காவது ஆபத்தான அளவில் தோன்றினால் பின்வரும் மூன்று அளவுகோல்களின் அடிப்படை யில் கட்டுப்பாடுகள் மீள அமுல் செய்யப் படும்.


  1. ஒரு லட்சம் குடியிருப்பாளர்களில் நானூறு பேருக்கு மேல் தொற்று ஏற்பட்டால் (Un taux d'incidence de 400 pour 100.000 habitants) -

  2. எதிர்பாராத விதமாக தொற்றுக்கள் திடீரென அதிகரித்தால்(Une augmentation brutale du taux d'incidence)

  3. ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை வசதிகளில் நெருக்கடி ஏற்பட்டால்(Une menace de saturation des services de réanimation) -

இந்த மூன்று நிலைமைகளில் உடனடியாகக் கட்டுப்பாடுகள் மீள நடைமுறைக்குக் கொண்டுவரப்படும்..

(அடைப்புக் குறிகளுக்குள் உள்ளவை பிரெஞ்சு சொற்கள்)

படம் :எலிஸே மாளிகையில் பிராந்திய பத்திரிகைகளுக்கு அதிபர் நேர்முகம்.

42 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: