இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் ஒடுக்கப்படுவது கவலை-மலாலா யூசுப்சாய் .

இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் ஒடுக்கப்படுவது கவலை அளிப்பதாக பாகிஸ்தானை சேர்ந்த பெண் கல்வி செயல்பாட்டாளரும், நோபல் பரிசு வென்றவருமான மலாலா யூசுப்சாய் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் 3 மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு சர்வதேச பின்னணி பாடகி ரிஹானா, ஸ்வீடன் நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க், உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். அமைதியாக போராட்டம் நடத்துவோர் மீது அடக்குமுறை செய்வது, இணையதள சேவையை துண்டிப்பது, கைது செய்வது போன்றவை கவலை அளிக்கின்றன என்றும் மக்களின் குறைகளை அரசு கேட்டறிய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொணடுள்ளனர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் உண்மையான நண்பர்களாக இணைந்து செயல்பட வேண்டும் எனவும் இந்தவேளை அவர் குறிப்பிட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.