தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி என்னை அச்சுறுத்தினார் ஜனாதிபதி கோட்டாபய.

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச.


ஜனாதிபதி தன்னை அச்சுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் நான் தெரிவித்த கருத்துகளுக்காக ஜனாதிபதி எனக்கு அச்சுறுத்தல் விடுத்தார்.ஜனாதிபதி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார். நாடு ஒன்றின் தலைவரிடமிருந்து நான் இதனை எதிர்பார்க்கவில்லை.


இதன்போது ஜனாதிபதியின் பாணியிலேயே நான் பதிலளித்தேன். தற்போது எனது மற்றும் எனது குடும்பத்தவர்களின் உயிர்களின் பாதுகாப்பு குறித்து நான் அச்சமடைந்துள்ளேன்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச எந்த தீர்மானத்தையும் எடுப்பதில்லை. அவர் பொம்மையின் பாத்திரத்தில் நடிக்கின்றார். அனைத்து தீர்மானத்தையும் மிஸ்டர் ருவன்ரி பேர்சன் எடுக்கின்றார், பசில் ராஜபக்ச, அப்படியாயின் பசிலின் கைப் பொம்மையாக கோத்தாபய இருக்கின்றார். நாட்டை விற்கும் செயற்பாட்டை நிறுத்த தவறினால் இந்த நாடு சீனாவுடன் மோதும் போது நாட்டில் பின மேடுகளே எஞ்சியிருக்கும் - ஆளும் கட்சி எம்.பி. விஜேதாச ராஜபக்ச இவ்வாறு நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

59 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: