வாங்குவினம் ஆனால் தரமாட்டினம்


உண்மையில் எமது புலம்பெயர் தமிழ் மக்களின் கடும் முயற்சியும் அயராத உழைப்புமே நாம் இந்த புலம் பெயர் தேசங்களில் சிறப்பாக வாழ்வதற்கு காரணமாக இருக்கின்றது .எமது பிள்ளைகள் படிக்க வேண்டும் அதற்காகவே நாம் மிகவும் கஷ்டப்பட்டு உழைக்கின்றோம் .


உதவும் நல்ல மனம்

அவ்வாறு உழைத்த பணங்களை தமக்கு மட்டும் அன்று எமது உறவுகளுக்கும் அது யார் எண்டாலும் பறவாயில்லை இங்க வெளிநாட்டில தாய் நாடு போல இல்ல அந்த அந்த ஊர்ல இருப்பவர்கள்தான் மாமா எண்டும் ஆன்டி எண்டும் உறவு இல்லாட்டிலும் உறவு போட்டு கதைச்சு சொந்தம் மாதிரி ஒரு சொந்தம். அது மட்டும் இல்ல பழைய சிநேகிதம் எண்டால் நம்ம நண்பேன்டா என்று உறவாகிட்டு சொந்தமாகி பழகிடுவம் .


எனக்கு ஒரு அவசர உதவி

சொந்தமா பழகிட்டு பாருங்கோ வைப்பினம் ஒரு ஆப்பு அது தாங்கவே முடியாது . ஆன்டி, மாமா, தம்பி,நண்பன் எண்டு பாசமா சொல்லி எனக்கு கொஞ்சமா ஒரு 1000 தொடக்கம் 5000 யூரோ அல்லது பவுன் வட்டிக்கு அல்லது கடனா தாங்கோ எண்டு கேப்பினம். அதுவும் பாவமா கேப்பினம் நீங்களும் அய்யோ பாவம் எண்டு குடுத்தா கொஞ்ச நாள் சும்மா மரியாதையா தருவினம் பிறகு ஆட்களையே காணக்கிடைக்காது .

சண்டித்தனம் சாமி

பாருங்கோ உங்கட காசையே வாங்கிட்டு உங்களுக்கே எப்ப தந்தனி எண்டு மிரட்டும் தொனியில கதைப்பினம். அப்ப நீங்கள் குடுத்துட்டம் இனி வாங்க தானே வேணும் எண்டு குடுத்தவன் கெஞ்சும் நிலைக்கு வைப்பான் எங்கட பரதேசி தமிழன். நான் எல்லாரையும் சொல்லல்ல உந்த கடனை வாங்கிட்டு கொடுக்காமல் ஏமாத்துறவயலுக்கு தான் சொல்லுறன் . வடிவேலு சொன்ன மாதிரித்தான்.


வரும் ஆனால் வராது

அப்ப பின்னால திரிஞ்சு டெலிபோன் எடுத்தால் பதிலே இல்ல வாங்கிற்று நடப்பு காட்டும் ஏமாளிகளும் உதவி கொடுத்துட்டு பரிதவிக்கும் உங்களுக்கும் நான் ஒண்டு சொல்லுறன் இந்த வெளிநாட்டில எல்லாரையும் நல்லவன் நம்பி போடாதுங்கோ . குறிப்பாக நல்லவன் மாதிரி நடிப்பவனை நம்பவே கூடாது . ஆனால் ஒண்டு மட்டும் உண்மை இந்த ஏமாத்து சுத்துமாத்துக்காரரெல்லாம் நல்ல வாழ்ந்தது எண்டு சரித்திரம் இல்ல ஏன் எண்டு சொல்லுங்கோ பாப்பம் உங்கட திட்டு இபேச்சுஇ நற்சரிப்பு எல்லாம் அவங்களுக்கு பொய் சேர்ந்து . வாழ் நாள் முழுவது உபத்திரப்படுவான்கள் நின்மதியே இல்லாமல் .அதனால நான் உங்களுக்கு ஒண்டு சொல்லுறன் எல்லாரையும் நம்பி கடன் குடுக்காதுங்கோ !உந்த கடன் வாங்கிற நீங்கள் ஏமாத்தாமல் திருப்பி குடுக்க பாருங்கோ அப்பத்தான் நீங்களும் நின்மதியா இருப்பியல் பாருங்கோ குடுப்பியல் எண்டு நினைக்கிறன்.

284 views
TGTEnew-2.jpg
NYC Skyline BW

Breaking News:

Meiveli media's vision is to
Engage, Enlighten and Encourage Tamil Community towards open dialogue.
we produce shows on the basis of  Tamil community's culture, perception, economic condition, social networks, political and power structures, norms, values, demographic trends, history past experiences.

Subscribe to Our Newsletter

  • White Facebook Icon

© Meiveli