இடிமின்னல்கள் இப்போது வீரியமாகத் தாக்குவதேன்?

ஒவ்வொரு ஒரு பாகை செல்சியஸ்(1°C) வெப்பநிலை அதிகரிப்புக்கும் மின்னல் தாக்குதல்கள் 12 வீதம் அதிகரிக்கின்றன

தமிழர் தாயகத்தில் ஒரேநாளில் மூவர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர் எனச் செய்திகள் வருகின்றன. கடந்த ஆண் டிலும் யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கு தலால் பல மரணங்கள் நிகழ்ந்தன.


இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் ஆண்டு தோறும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்ற இயற்கைச் சீற்றமாக இடிமின்னல் மாறிவருகின்றது. முன்பொரு காலத்தில் உயர்ந்த இடங் களை மட்டுமே இலக்குவைத்து வந்த இடி மின்னல்கள் இப்போதெல்லாம் மனிதர் களது தலைவரை வந்து தாக்குகின்றன.இதற்குக் காரணம் என்ன?

தரைக்கும் முகில்களுக்கும் இடையிலான ஒரு மின்சாரத் தெறிப்பே மின்னல் தாக்குதல். வளிமண்டலத்தில் இயற்கையாக ஏற்படுகின்ற நிகழ்வுதான் என்றாலும் பருவநிலை மாற்றத்தால் அது ஏனைய இயற்கைச் சீற்றங்கள் போன்று மாறுதலடைந்து வருகின்றது.


பூமியின் வெப்பம் அதிகரித்து வருவதே மின்னல்கள் வீரியமடையக் காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.புயல் மேகங்களுக்கு இடையே சதா ஆயிரக் ணக்கில் இடி மின்னல்கள் நிகழ்ந்தாலும் அவற்றில் அரிதாகச் சில மின் கடத்தல்களே தரையைத் தாக்குகின்றன. ஆனால் மனித நடவடிக்கைகள் காரணமாக வெப்பம் அதிகரித்து வளிமண்டலம் அதிகளவு ஈரப்பதன் கொண்டதாக மாறுவதால் மின்னலின் தாக்கம் தரையை நோக்கிக் கடத்தப்படுவது "வழமைக்கு மாறாக" அதிகரித்து வருகிறது.


கடந்த பத்து ஆண்டுகளில் மின்னல் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதாக காட்டும் ஆய்வு ஒன்றை journal Science சஞ்சிகை அண்மையில் வெளியிட்டிருந்தது. ஒவ்வொரு ஒரு பாகை செல்சியஸ்(1°C) வெப்பநிலை அதிகரிப்புக்கும் மின்னல் தாக்குதல்கள் 12 வீதம் அதிகரிக்கின்றன. இதன் அர்த்தம் அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த நூற்றாண்டின் இறுதியில் மின்னலின் தாக்கங்கள் 50 வீதத் தால் உயரும் என்பதாகும்-என்று அதில் தெரிவிக்கப்படுகிறது.

2010 - 2020 காலப்பகுதியில் வெப்பம் அதிகரிப்பை ஆய்வு செய்த வோஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் பூமியின் ஆர்ட்டிக் பகுதி வட்டகை நாடுகளான வடக்கு ரஷ்யா, கனடா, அலாஸ்கா, ஐரோப்பா பகுதிகள் அதிக மின்னல் தாக்குதல்களைச் சந்திக்கத் தயாராக வேண்டும் என்று எச்சரித்துள்ளனர்.


இந்தப்பகுதியில் 2010 ஆம் ஆண்டு 15 ஆயிரமாகக் கணக்கிடப்பட்ட மின்னல் தாக்குதல்கள் 2020 இல் ஒரு லட்சத்து 50 ஆயிரமாக அதிகரித்துள்ளன. பூமியின் இதர பகுதிகளை விட ஆர்ட்டிக் பிரதேசமே வேகமாக வெப்பமடைந்து வருகிறது. நீண்டகாலமாக கடலில் பனி உருகிவருவதும் அதிகமான கப்பல் போக்குவரத்துகளும் ஏற்படுத்தப் போகின்ற இடி, மின்னல், புயல் மழை ஆபத்துக்களை ஆர்ட்டிக் நாடுகளில் வசிப்போர் அறியாதவர்களாக உள்ளனர்-என்று அறிவியலாளர் ஒருவர் எச்சரிக்கிறார்.


மின்னல் தாக்கம் ஏற்படுத்தும் பாரிய அழிவாக காடுகள் தீக்கிரையாகின்றன.காட்டு விலங்குகளும் தாவர இனங்களும் அழிகின்றன. இதைவிட சமீப காலமாக மனித உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. இந்தியாவின் வறிய மாநிலமான பீஹாரில் கடந்த வருடம் கோடையின் போது பத்து நாட்களில் 147 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். உலகை திரும்பிப் பார்க்க வைத்த மிக அதிக உயிர்ச் சேதம் அதுவாகும்.


கிராமவாசிகளும் கமக்காரர்களுமே அதிக எண்ணிக்கையில் உயிரிழக்கிகின்றனர். வெளியான இடங்களைத் தவிர்த்தல் போன்ற பொதுவான பாதுகாப்பு ஆலோசனைகளால் அல்லது இடி தாங்கிகள், மின்னல் கண்டறி கருவிகள் (lightning detection systems) போன்றனவற்றால் மட்டும் இனி மின்னலால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்துவிட முடியாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

32 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: