1200 மில்லியன் செலவில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலைய கட்டிடத்தில் மாடு கட்ட முடியாது-யாழ் முதல்வர்

யாழ்ப்பாணம் புதிய நெடுந்துார பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடுவதற்கு இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து சேவையினர் மறுத்துவரும் நிலையில் தங்கள் இறுதி தீர்மானத்தை அறிவிப்பதற்கு எதிர்வரும் வியாழக்கிமை வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாக முதல்வர் வி. மணிவண்ணன் தெரிவித்தார்.
இ.போ.சபையினர் தங்கள் முடிவை அறிவிப்பதற்காக எதிர்வரும் வியாழக்கிமை வரையில் அவகாசம் கேட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 1200 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலைய கட்டிடத்தில் மாடு கட்ட முடியாது. இடிக்கவும் முடியாது. எனவே எதிர்வரும் வியாழன் வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த காலப்பகுதியில் தனியார் பேருந்து சேவையினையும் பழைய இடத்திலிருந்து நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிமைக்கு பின்னர் அடுத்தகட்டம் தொடர்பாக ஆராய்வோம் யாழ் முதல்வர் தெரிவித்துள்ளார்.