நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையை ஆற்றிய இலங்கைத் தமிழ் பெண்!

வீடியோ இணைப்பு

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையை ஆற்றிய இலங்கைத் தமிழ் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் வானுஷி வோல்ரஸ்


நியூஸிலாந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவான முதல் இலங்கைப் பெண் வனுஷி வால்டர்ஸ் நேற்று தனது கன்னி உரையினை நிகழ்த்தியுள்ளார்.

தமிழ் பாரம்பரிய உடை அணிந்து பாராளுமன்றதத்திற்கு சென்றதுடன் தனது உரையில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் சுருக்கமான அறிக்கைகளை வெளியிட்டார். ஒக்டோபர் 16 நடைபெற்ற நியூசலாந்தின் பாராளுமன்ற தேர்தலில் ஆக்லாந்தின் வடமேற்குப் பகுதியின் மேல் துறைமுகத்தொகுதியில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவராவார்.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஒருவர் முதன் முறை நியூசிலாந்து பாராளுமன்றத்திற்கு செல்வது இதுவே முதற்தடவை. மனித உரிமைகள் சட்டத்தரணியான வனுசி கொழும்பின் முதல் மேயராக இருந்த சரவணமுத்துவின் பேத்திஎன்பதுடன் நியூஸிலாந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவான முதல் இலங்கைப் பெண் தமிழர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.


இலங்கையில் யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாகக் கொண்டவர் வனுஷி, இலங்கை அரசவையின் கொழும்பு வடக்குதொகுதியில் உறுப்பினராக 1931 முதல் 1947வரை பதவி வகித்த லூசியா நேசம் சரவணமுத்து என்பசரின் பேத்தி என்பதும் குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்தின் வடமேற்கு ஆக்லாந்தில் ஹாமில்டன் கிரிக்கெட் வீரர் ஜேக் பெசன்ட்டை எதிர்த்து போட்டியிட்டாவானுஷி வால்டர்ஸ் 14,142 வாக்குகளை பெற்று பாராளுமன்றத்தற்கு தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது.


37 views0 comments
  • White Instagram Icon

Contact Us

Address

© Copyright  by Meiveli Drama School.

Tel: +44 7779039372

Email: meivelidrama@gmail.com

Yeading Lane, Hayes, UB4 9LE