தேர்தல் வெற்றியை கொண்டாட தடை- இந்திய தலைமை தேர்தல் ஆணையம்.


இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகின்ற நிலையில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் முடிவுகளுக்கு பின் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மே 2-ந்தேதி 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் 3,23,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 2771 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,97,894 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

5 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: