நடைமுறை அரசியலை கையாள தெரிந்த ஒருவரே வடக்கு-கிழக்கில் முதலமைச்சர் வேட்பாளராக வேண்டும்

மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா

வடக்கு-கிழக்கில் நிர்வாக ஆளுமையும், நடைமுறை அரசியலை கையாள தெரிந்த ஒருவருமே முதலமைச்சர் வேட்பாளராக வேண்டுமென தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றாக தமிழ் தேசிய கட்சியின் தலைவர், மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் பொது முதலமைச்சர் வேட்பாளராக வேலன் சுவாமிகளை களமிறக்கலாமென, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் அண்மையில் தெரிவித்திருந்தமை தொடர்பில் கருத்து தெரிவிததபோதே இவ்வாறு தெரிவித்தார். வடக்கை விட கிழக்கில் பாரிய பிரச்னைகள் வேறுவேறு ரூபங்களில் எழுந்துள்ளதனால், மாகாணசபை தேர்தல் எனும்போது கிழக்கு மாகாணம் தொடர்பிலேயே தீவிரமாக சிந்திக்க வேண்டும் என தெரிவித்தார்;. தமிழ் தேசியக் கட்சிகள் ஒரு பொது அரசியல் செயற்திட்டத்தின் அடிப்படையில், சுயநிர்ணய அடிப்படையில் ,அரசியல் தீர்வை தொடர்ந்த வலியுறுத்திக்கொண்டு வருகின்ற அதேவேளையில், மாகாணசபை முறையை முழுமையாகவும், உடனடியாகவும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்பதை அழுத்தம் திருத்தமாக இலங்கை அரசுக்கும், எதிர்க்கட்சிக்கும், இலங்கை பிரச்னையில் ஈடுபாடு காட்டும் வெளிநாட்டு தரப்பிற்கும் சொல்ல வேண்டும் என வலியுறத்தியுள்ளார்;.


விக்னேஸ்வரன் சொல்லியிருப்பது அவரது சொந்தக்கருத்து என்றும் ஆனால் இந்த மாகாணசபை முறைமை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியுமானால், அப்போது நிர்வாக திறமையும், நடைமுறை அரசியலை கையாள தெரிந்தஆளுமையும் கொண்டவர்களைத்தான் வடக்கிலும், கிழக்கிலும் நாம் முதலமைச்சர் வேட்பாளராக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

18 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: