முன்பள்ளி ஒன்றில் வாள்வெட்டு தாக்குதல் - ஐவர் பலி.


பிரேஸிலில் தென் பிராந்தியத்திலுள்ள முன்பள்ளி ஒன்றில் 18 வயது இளைஞர் ஒருவர் நடத்திய வாள் வெட்டுத் தாக்குதலில் ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த தாக்குதல் சம்பவம் நேற்று (04) இடம்பெற்றது.உயிரிழந்தவர்களில் 2 வயதுக்கு குறைந்த மூன்று குழந்தைகளும் இரண்டு ஊழியர்களும் அடங்குகின்றனர்.

தாக்குதல்தாரி, ஆயுதத்தால் தன்னை தாக்கிக்கொண்ட நிலையில், வைத்தியசாலையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இந்த தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.மேலும், சண்டா கேட்டரினா ( Santa Catarina) மாநிலத்தில் மூன்று தினங்களுக்கு துக்கதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.


35 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: