சடலமாக மீட்கப்பட்ட யுவதி பற்றி தகவல் கோருகின்றது பொலீஸ்!


பாரிஸ் புறநகரான அர்நூவீல் (Arnouville) பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்ணை அடையாளம் காண்பதற்கு உதவுமாறு பொந்துவாஸ் (Pontoise) அரச சட்டவாளர் அலுவலகம் பொதுமக்களைக் கேட்டிருக்கிறது.


"20-30 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் இந்திய-பாகிஸ்தான் சாயலைக் கொண்டவர். 1,60 மீற்றர் உயரமுள்ளவர். சுருக் குகள் கொண்ட கறுப்புச் சட்டையையும் மண்ணிறமான இடுப்புப் பட்டியையும் அணிந்திருந்தார். கால்களில் றோஸ் நிற காலணிகள் காணப்பட்டன. அவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 0 800 33 60 98 தொலைபேசி இலக்கத்துக்குத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் "

இவ்வாறு அரச சட்டவாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

பிரேத பரிசோதனைகள் கூரிய ஆயுதத் தால் கழுத்து வெட்டப்பட்டதால் உயிரிழ ந்ததை உறுதிப்படுத்தி உள்ளன.ஆனால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட தடயங்கள் எதுவும் சடலத்தில் காணப் படவில்லை என்று விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த புதனன்று மக்கள் நடமாட்டம் உள்ள boisée d'Arnouville விவசாயப் பண்ணைப்பகுதியில் கழுத்தில் வெட்டுக் காயத்துடன் காணப்பட்ட அச் சடலம் வழிப்போக்கர் ஒருவரால் கண்டுபிடிக் ககப்பட்டு பின்னர் மீட்கப்பட்டிருந்தது.

198 views
TGTEnew-2.jpg
NYC Skyline BW

Breaking News:

Meiveli media's vision is to
Engage, Enlighten and Encourage Tamil Community towards open dialogue.
we produce shows on the basis of  Tamil community's culture, perception, economic condition, social networks, political and power structures, norms, values, demographic trends, history past experiences.

Subscribe to Our Newsletter

  • White Facebook Icon

© Meiveli