தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் காலமானார்.
Updated: Mar 20

பல்கலைக்கழக காலத்திலிருந்து போராட்டச் செயற்பாடுகளில் ஈடுபட்டு 1983இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து புகைப்படக் கலைஞராக, நிதர்சனம் தொலைக்காட்சி புலிகளின் குரல் வானொலி ஆகியவற்றின் ஆரம்ப கர்த்தாவாக விளங்கிய பரதன் இராஜநாயகம் அவர்கள் மாரடைப்பால் லண்டனில் நேற்று காலமானார்.
போராட்டம் சம்பந்தமான செய்திகளையும் தகவல்களையும் மக்களிடம் உடனுக்குடன் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டுமென்ற எண்ணத்தோடு அதன் ஆரம்பகர்த்தாவாக கேணல் கிட்டுவின் வழிநடாத்தலில் பெரும் பங்காற்றியவர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் புகைப்படப் பிரிவு, ஆவணப் பிரிவு, குறும்படம், விடுதலைப் பாடல் ஒலிப்பதிவு, ஒலிநாடா வெளியீடு, புலிகளின் குரல் வானொலி, நிதர்சனம் தொலைக்காட்சி என பலதரப்பபட்ட பகுதிகளில் தன்னுடைய வரலாற்றை பதித்தவர். பெருமதிப்புக்குரியவரும் போராட்டகால ஊடக செயல்வீரரான பதரன் இராஜநாயகம் அவர்களுக்கு மெய்வெளி அஞசலியைத் தெரிவித்து நிற்கின்றது.