செவ்வாயில் மனித ஹெலி பறக்கும்காட்சிகளுக்காக உலகம் காத்திருப்பு!

Updated: Apr 19


செவ்வாய்க் கிரகத்தில் நாசாவின் "மாஸ்ஹொப்ரரின்" முதலாவது பறப்பு முயற்சி இன்று நிகழ்கிறது.அமெரிக்க நேரம் அதிகாலை 3.30 மணிக்கு (Eastern Daylight Time) பறப்பு இடம்பெறும் என்றுநாசா அறிவித்தது.


வேற்றுக் கிரகம் ஒன்றில் மனிதனது முதலாவது பறப்பு முயற்சி என்று சரித்திரத்தில் பதிவாகப் போகின்ற பறப்பு வெற்றிகரமாக நிகழ்ந்ததா என்பதை உறுதிப்படுத்தும் தரவுகளுக்காக அறிவியாளர்கள் தற்சமயம் காத்திருக்கின்றனர்என்று அறிவிக்கப்படுகிறது.

சுமார் பத்தடி உயரத்தில் முப்பது செக்கன் களுக்குக் குறைந்த நேரம் ரோபோ ஹெலி பறப்பதை அதன் தாய்க் கலமான Perseverance விண்கலம் பல கோணங்களில் படம் பிடித்து அனுப்பும். பறப்பு திட்டமிட்டபடி நடந்ததா என்பதை உறுதி செய்யும் முதல் தரவு பாரிஸ் நேரப்படி இன்று காலை 09.30 மணியள வில் பூமிக்கு கிடைக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது. நண்பகல் 12 மணிக்குப் பிறகு ஒளிப்படங்களை நேரலையாக தனது சமூகவலைத்தளங்களில் காட்சிப்படுத்த நாசா ஏற்பாடு செய்துள்ளது.


சில மென்பொருள் தொழில் நுட்பச் சோதனைகளுக்காக ஒருவார காலம் தாமதமான பறப்பு முயற்சியின் புதிய நேர அட்டவணை இன்று 19 ஆம் திகதி திங்கள்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு மாற்றப்பட்ட தகவலை நாசா வெளியிட் டிருந்தது. "மாஸ்கொப்ரர்" என அழைக்கப்படும் Ingenuity ஹெலி அதன் முன்னைய நேரஅட்டவணையின்படி கடந்த 11ஆம் திகதி முதலாவது பரீட்சார்த்தப் பறப்பை மேற்கொள்ள இருந்தது. ஆனால் அதன் முக்கிய கருவிகள் சிலவற்றின் மென்பொருள்(software) ஒழுங்குபடுத்தல்கள் காரணமாக அது தாமதமாகியது.


பூமிக்கு வெளியே வேற்றுக் கிரகம் ஒன்றில் மனிதன் மேற்கொள்கின்ற இன்றைய பறப்பு 1903 ஆம் ஆண்டு ரைட்சகோதரர்கள்(Wright brothers) பூமியில் நிகழத்திக்காட்டிய முதல் விமானப் பறப்பு போன்றதொரு சரித்திர நிகழ்வாகப் பார் க்கப்படுகிறது.

36 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: