Search
பைஸர் - பயோ என் டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு பிரித்தானிய அனுமதி.

பைஸர் - பயோ என் டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு பிரித்தானிய அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில் குறித்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கிய முதல் நாடாக பிரித்தானியாவாகும்.
குறித்த தடுப்பூசி அடுத்த வாரம் முதல் அந்நாட்டில் பயன்படுத்த உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பிரிட்டனின் மருந்து கட்டுப்பாட்டளர்களான எம்.எச்.ஆர்.ஏ, இந்த தடுப்பூசி கொரோனா நோய்க்கு எதிராக 95சத வீத பாதுகாப்பை வழங்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அடுத்தவாரம் முதல் 800 000 டோஸ்கள் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுகாதார செயலாளர் மாற் ஹான்கொக் தெரிவித்துள்ளார். பாராமரிப்பு நிலையங்களில் உள்ள முதியவர்கள் மற்றம் பராமரிப்பு நிலைய ஊழியர்கள் இந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
92 views0 comments