யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் கைதிற்கு தமிழ் அரசியல் தலைவர்கள் கண்டனம்!


யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் டுவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.


கடுமையான இன மற்றும் அரசியல் பாதுகாப்பின்மை பாசிசத்தை நோக்கிய ஒரு நிலையான பாதையில் தவிர்க்க முடியாத அளவுக்கு உயரத்தை எட்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அறிக்கை ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை உடனடியாக விடுதலை செய்வதோடு யாழ். நகரை சுத்தப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட மாநகர காவல் படையை சுதந்திரமாக இயங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு; கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர முதல்வரின் கைதுச் சம்பவமானது இதமிழ் மக்களை தொடர்ந்தும் பயப்பீதியிலேயே வைத்திருப்பதனையே அரசு விரும்புவதன் வெளிப்பாடக அமைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாநகர சபையும் ஏனைய மாநகர சபைகளைப் போன்று மாநகர சபைகளிறகுரிய அதிகாரங்களை முழுமையாக பயன்படுத்த முனைகின்றபோது இவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார். இதனால் மாநகர முதல்வரின் கைது நடவடிக்கையினை கண்டிப்பதோடு உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் ,யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக தமிழ் முற்போக்கு கூட்டணி கடுமையான கண்டனம் வெளியிட்டுள்ளது. கைதிற்கு பதில் அவர் மீது குற்றம் சாட்டிஇ எழுத்து மூல விளக்கம் கோரும் சட்டபூர்வ நடவடிக்கையை வடமாகாண ஆளுநர் எடுத்து, நிதானமாக நடந்து கொண்டிருக்க வேண்டும் எனவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இத்தோடு,யாழ் மாநகரசபையின் முதல்வர் கைதானது அரசாங்கத்தின் எதேச்சதிகார செயற்பாடாகவே பார்க்கவேண்டியுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணவன் தெரிவித்துள்ளார்.


யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன்பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை மோசமான இனவாதம்இ பாசிசம் ஆகியவற்றின் அடிப்படையிலானது. மணிவண்ணனை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசரருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

16 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: