அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியை பதிவு செய்த பிரவீன் ஜயவிக்ரம.

Updated: May 3


அறிமுக டெஸ்ட் இன்னிங்ஸில் அதிசிறந்த பந்துவீச்சை நிலைநாட்டிய இலங்கையராக பிரவீன் ஜயவிக்ரம இன்று பதிவானார்.


பங்களாதேஷூக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவர் இந்த மைல்கல்லை எட்டியதுடன், போட்டியில் இலங்கை அணி 259 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

பல்லேகெலே மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் மூன்றாம் நாளான இன்று 6 விக்கெட் இழப்பிற்கு 469 ஓட்டங்களுடன் முதல் இன்னிங்ஸை இலங்கை அணி தொடர்ந்தது.


மேலும் ஒரு விக்கெட் வீழ்த்தப்பட்டதை அடுத்து, 7 விக்கெட் இழப்பிற்கு 493 ஓட்டங்களுடன் ஆட்டத்தை நிறுத்திக்கொள்ள இலங்கை அணி தீர்மானித்தது.

பதிலளித்தாடிய பங்களாதேஷ் அணி சார்பாக தமிம் இக்பால் அரைச்சதமடித்து 92 ஓட்டங்களைப் பெற்றார்.


அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடும் 22 வயதான பிரவீன் ஜயவிக்ரம 92 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை கைப்பற்றினார். இது அறிமுக டெஸ்ட் இன்னிங்ஸில் இலங்கை வீரர் ஒருவர் பதிவு செய்த அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகும்.


பங்களாதேஷ் அணி 251 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 17 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, இன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

12 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: