பிரித்தானிய இளவரசர் பிலிப் தனது 99 வது வயதில் இன்று காலமானார்!


எடின்பரோ கோமகன் இளவரசர் பிலிப் காலமான செய்தியை பிரித்தானிய மகாராணியும் இளவரசர் பிலிப்பின் மனைவியுமான இரண்டாம் எலிசபேத் உறுதிப்படுத்தியுள்ளார்.


இருதய நோயினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் இன்று 9ம் திகதி வின்ஸ்டோர் அரண்மனையில் அமைதியாக காலமானார் என ஆழ்ந்த துக்கத்தில் ராணியார் தனது அன்பு கணவரது மரண செய்தியை அறிவித்துள்ளார்.

இளவரசர் பிலிப்பின் மரணத்திற்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது அனுதாபத்தை தெரிவித்ததோடு 'எண்ணற்ற இளைஞர்களின் வாழ்க்கையை ஊக்கப்படுத்தினார் என குறிப்பிட்டுள்ளார். பிரிட்டிஷ் வரலாற்றில் மிக நீண்ட காலம் பணியாற்றிய இரண்டாம் எலிசபெத்தை ராணிணை இளவரசர் ஆவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 1947 இல் திருமணம் செய்து கொண்டார். இளவரசர் பிலிப் மற்றும் மகா ராணிக்கு நான்கு குழந்தைகள், எட்டு பேரக்குழந்தைகள் மற்றும் 10 பு_ட்டப்பிள்ளைகள் உள்ளார்ககள். 1921 ஜூன் 10 அன்று கிரேக்க தீவான கோர்பூவில் பிறந்த இளவரசர் பிலிப், கிரேக்க மற்றும் டென்மார்க், இளவரசர் ஆண்ட்ரூ ஹெலினெஸ் மன்னர் முதலாம் ஜார்ஜ் அவர்களின் இளைய மகனாவார்.


250 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: