லாக்டவுனுக்கு எதிராக லண்டனில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்.

கொரோனா காரணமாக அமுல்படுத்தப்பட்ட லாக்டவுனுக்கு எதிராக லண்டன் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி நடத்திய போராட்டத்தில் போலீசார் மீது சிலர் தாக்குல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
லண்டன் நகரில் கடந்த ஓர் ஆண்டாக லாக்டவுன் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்துள்ளனர். பொருளாதார ரீதியிலும் நாடு கடுமை பாதிக்கப்பட்டுள்ளதால் பலர் வேலையிழந்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்நாட்டு அரசு உதவி தொகையை வழங்குகிறது. இருப்பினும், அந்த உதவித்தொகைகள் போதுமானதாக இல்லை என்று மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதனால் லண்டன் நகரில் அறிவிக்கப்பட்டுள்ள லாக்டவுனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆயிரக் கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எவ்வித அனுமதியுமின்றி போராட்டத்தை நடத்தியதால் போலீசார், கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். அப்போது சிலர் போலீசாரை நோக்கி கண்ணாடி போத்தல்களை வீசியதில் போலீசார் சிலர் காயமடைந்தனர். நீண்ட இழுபறிக்குப் பிறகு போராட்டக்காரர்களை போலீசார் அங்கிருந்து கலைத்தனர். மேலும் கொரோனா விதிமுறைகளை மீறியதாக இதுவரை 36 போரட்டகாரர்களையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.