இலங்கை விரைவில் மாகாணசபை தேர்தல்களை நடத்தவேண்டும்.

இந்தியா அறிவுறுத்தல்.

மாகாணசபைகளுக்கு தேர்தல்களை நடத்துவது உட்பட்ட நடவடிக்கைகள் மூலம் அதிகாரங்களை பகிர்வது குறித்த தனது அர்ப்பணிப்பை நிறைவேற்றவேண்டும் என்ற சர்வதேச சமூகத்தின் கோரிக்கையை இந்தியா ஆதரிக்கின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரைக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் ஜெய்சங்கர் இதனை தெரிவித்துள்ளார்.

இது இலங்கையின் 13வது திருத்தத்தின் அடிப்படையில் அனைத்து மாகாணசபைகளும் பலனளிக்ககூடிய விதத்தில் செயற்படுவதை உறுதி செய்வதற்கான அர்ப்பணிப்பையும் உள்ளடக்கியுள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட்டதாக தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்தியா வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை ஆனால் வாக்களிப்பிற்கு முன்னதாக சமத்துவம் நீதி கௌவரம் மற்றும் சமாதானத்திற்கான தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்வது குறித்த வலுவான அறிக்கையொன்றை இந்தியா வெளியிட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1 view
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: