உலகின் மிக நீளமான முயலை இங்கிலாந்தில் காணவில்லை!


உலகின் மிக நீளமான முயல் அதன் வாழ்விடத்தில் இருந்து களவாடிச் செல்லப்பட்டுள்ளது.

நான்கு அடி நீளமுடைய டேரியஸ் (Darius) என்ற பெயர் கொண்ட அந்த முயல் இங்கிலாந்தின் Worcestershire பகுதியில் அதன் உரிமையாளரது தோட்டத்தில் இருந்து சனிக்கிழமை இரவு நேரம் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.


டேரியஸை இழந்து மிகவும் மனமுடைந்து போயுள்ளார் எனத் தெரிவித்திருக்கும் முயலின் சொந்தக்காரர் அதனைக் கண்டுபிடிக்கத் தகவல் தருவோருக்கு ஆயிரம் பவுண்ட்ஸ் நிதி தருவதாக அறிவித்துள்ளார்.

பதினொரு வயதுடைய டேரியஸை அதன் முதுமையைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பாக மீட்டுத் தருமாறு அவர் தனது ருவீற்றர் மூலம் பகிரங்க வேண்டு கோள் விடுத்துள்ளார். 1.29 மீற்றர் நீளம் காரணமாக அந்த முயல் உலகின் மிக நீளமான முயல் என்று 2010 ஆம் ஆண்டில் கின்னஸ் உலக சாதனைப் பதிவேட்டில் (Guinness World Record) இடம் பிடித்தது. Stoulton என்ற நகரில் வசிக்கும் 68 வயதான Annette Edwards என்ற பெண்ணுக்குச் சொந்தமானது.

131 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: